இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசம்!
Tuesday, November 26th, 2024
அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது.
அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்கட்டணத் திருத்த முன்மொழிவுகளை வழங்கத் தவறினால் இலங்கை மின்சார சபையின் இலாபத்திலிருந்து நுகர்வோருக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
குறித்த திருத்த யோசனைத் தயாரிப்புக்காக இலங்கை மின்சார சபை இரண்டு சந்தர்ப்பங்களில் கால அவகாசத்தைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கமரா கண்காணிப்பு பாதுகாப்புடன் நல்லூர் !
சிறுவர்கள் முகக்கவசம் அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்த...
முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த சட்டக் கட்டமைப்பு – அமைச்சர் பசில் ராஜபக்ச துறைசார் தரப்பினருடன் கலந்த...
|
|
|


