மின்பாவனையாளர்களின் பாதுகாப்பிற்கு புதிய சட்டங்கள்!

Wednesday, March 29th, 2017

மின்பாவனையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு புதிதாக 11 சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மத்யூ தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பாவனையாளர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் சமர்ப்பிக்கப்படும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மத்யூ தெரிவித்துள்ளார்.  ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பாவனையாளர் தொடர்பான கலந்துரையாடலின்போது தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத்தடங்கல்களுக்கானதும் மின்சாரச் சேவைக்கணக்கின் பெயர் மாற்றுகை கட்டணச் சீட்டுப்பெறல் , வளாகத்துள் நுழைதல் மின்மானி வாசிப்பு தொடர்பாக 11 விதிகள் மற்றும் வழிகாட்டிகள் வெளியிடப்படவுள்ளது.

மின்சார விநியோகத்தின் முக்கிய நிறுவனமான இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை மின்சார தனியார் சபை மின்சார பாவனையாளர் அமைப்பு மற்றும் நுகர்வோர் அமைப்பு உள்ளிட்டோரின் பங்களிப்புடனான கலந்துரையாடல் மூலம் மின்சார சேவையை தரமான நிலைக்கு முன்னெடுத்தல் நுகர்வோர் உரிமையை பாதுகாத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் சட்டவிதிகள் ஒழுங்கு விதிகள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

Related posts: