உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் – சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, June 24th, 2022

மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளதனால் சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு மட்டுமல்ல நாட்டில் இருக்கின்ற சகல பிரஜைகளினுடைய பொறுப்பாகும் .என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினருமான இரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலே பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் சரியான விதத்தில் உணவினை பெற்றுக்கொள்ளாததால் போசணைக் குறைபாடு நாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன .

குறிப்பாக இந்த போசணைக் குறைபாடு ஏற்படுவதற்கு காரணம் மக்கள் தாங்கள் எடுக்கின்ற உணவின் அளவினை குறைத்துள்ளார்கள். அத்துடன் தரமான உணவினை தவிர்க்கப்படுகின்றன. இது தொடர்பாக குழந்தைகளிடையே செய்த ஆய்வின் பிரகாரம் தெற்காசியாவிலே இலங்கை இரண்டாவது நாடாக தள்ளப்பட்டுள்ளது

எனவே இவ்வாறான நிலையிலே போசணை குறைபாடு ரீதியாக சரியான அவதானம் செலுத்தி சிறுவர்களுக்கு வளமான எதிர்காலத்தினை கொடுக்க வேண்டிய கடப்பாடு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு மட்டுமல்ல நாட்டில் இருக்கின்ற சகல பிரஜைகளினுடைய பொறுப்பாகும் .

அந்தவகையில் அரச மருத்துவ அதிகார சங்கம் என்ற ரீதியில் இந்த விஷயத்தினை ஆராய்ந்து பார்க்கும் போது சிறுவர்களிலே 20 சத வீதமானோருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை காரணமாக சிறுவர்களை மையப்படுத்தி போசணைக் குறைப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்குரிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: