இலங்கை சேர்ந்த இருவர் தனுஷ்கோடி அருகே கைது !.
Thursday, January 9th, 2025
சட்டவிரோதமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணத்தால் அண்மைக்காலமாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன
இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு அவ்வப்போது இலங்கை வாழ் தமிழ் மக்கள் கள்ள படகு மூலம் வருவது வாடிக்கை நிகழ்வாகிவிட்டது
அதேபோல தமிழகத்திலிருந்தும் இலங்கைக்கு கள்ளப்படவும் மூலம் ராமேஸ்வரம் கடல் ஊடாக சிலர் செல்கின்றனர்
இந்நிலையில் தனுஷ்கோடி காவல் துறை அதிகாரிகளுக்கு சில ரகசிய தகவல் கிடைத்துள்ளது இலங்கை சேர்ந்த இரண்டு நபர்கள் ஈரோடு பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து சட்ட விரோதமான முறையில் கள்ளபடக்கும் மூலம் இலங்கை செல்ல உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனுஷ்கோடி போலீசார் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஜோடியை பிடித்த விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த டிரோஷன் மற்றும் சஹானா என தெரிய வந்தது இவர்கள் ஏற்கனவே இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் மேலும் மீண்டும் தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரம் கடல் ஊடாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி மேற்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது மேலும் இவர்களை நடராஜபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் படகுமூலம் இலங்கையில் இறக்கி விடுவதற்கு தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது
இவர்கள் எதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிற்செல்ல முயற்சி மேற்கொண்டனர் ஏதேனும் கடத்தல் சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டார்களா மேலும் இவர்கள் மீது வழக்கு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி போலீசார் தீவிர விசாரணையில் போட்டு வருகின்றனர்.
இணையத்தளமும் அறிமுகம்
Related posts:
|
|
|


