இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரிப்பு – சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை!
Thursday, June 12th, 2025
இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நோயைப் பரப்பும் பக்ரீறியா பல்வேறு வழிகளில் மனித உடலுக்குள் நுழைவதாகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் ஆலோசகர் துசானி தாப்ரே தெரிவித்துள்ளார்.
இந்த நோயினால் அதிகமாக இரத்தினபுரி, குருநாகல், கேகாலை மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், நோயைத் தடுக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்
00
Related posts:
தமிழில் தேசிய கீதம் பாடியது தொடர்பான மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!
லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்...
அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர...
|
|
|


