இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணத்தில் விக்சித் பாரத் ஓட்டம்!

…….
இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025 இனை ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் வரும் 28 செப்டம்பர் 2025 காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் தொடங்கி, விக்சித் பாரத் ஓட்டம் 2025 நிகழ்வை நடத்த இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் முக்கியச் சின்னங்கள் ஊடாக நடைபெறும் இந்த ஓட்டம், இந்திய வம்சாவளியினரும், உள்ளூர் சமூகத்தினரும், இந்தியாவின் நண்பர்களும் ஒன்றிணைந்து உடற் பயிற்சி, சேவை மற்றும் கூட்டு பொறுப்புணர்வை கொண்டாடும் நிகழ்வாக அமையும்.
உலகளாவிய அளவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கும். இந்தியாவின் முன்னேற்றத்தையும் பண்பாட்டு மதிப்புகளையும் வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சி, சமூகக் குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் நண்பர்களையும் இளைஞர்களையும் இணைத்து, “உலகமே ஒரே குடும்பம்” என்ற வசுதைவ குடும்பகம் என்ற உணர்வை வலுப்படுத்தும்.
லண்டன் மற்றும் பாரிஸிலிருந்து நியூயார்க், மாஸ்கோ, சிட்னி மற்றும் யாழ்ப்பாணம் வரை, சமூகங்கள் ஒன்றிணைந்து, தமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வதோடு, இந்தியாவின் விக்சித் பாரத் பயணத்தில் தாம் வகிக்கும் பங்கை மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில், சிறப்புப் பிரமுகர்களும் உள்ளூர் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் முன்னேற்றக் கதையை உலகுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும், மக்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதையும் வலியுறுத்தும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அனைத்து உறுப்பினர்களையும் இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்க அழைக்கிறது. ஓட்டத்தில் இணைவதன் மூலம், பங்கேற்பாளர்கள் உடற்பயிற்சி மற்றும் கலாச்சார பங்கேற்பைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட நோக்கத்தின் வலுவான பிணைப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்க முடியும்.
Related posts:
|
|