பயணிகள் விமானங்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Sunday, December 11th, 2016

சிறிய ஆளில்லா விமானங்களைக் கொண்டு மற்ற விமானங்களை தாக்கும் உத்தியினை தீவிரவாதிகள் பின்பற்றக்கூடும்  என கனடா மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவின், Edmonton பகுதியில் இருந்து வெஸ்ட் ஜெட் என்ற விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது, விமானத்திற்கு அடியில் சுமார் 60 மீற்றர் ஆளில்லா விமானம் ஒன்று பறந்து சென்றது.

அதுமட்டுமின்றி கடந்த மாதம் ரொரன்ரோவுக்கு போர்ட்டர் எயர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்த போது அதற்கு அருகாமையில், ஆளில்லா விமானம் என்று கருதப்படும் ஒன்று சென்றுள்ளது. இதை கருத்தில் கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சுமார் பத்து முதல் நாற்பது நிமிடங்கள் வரை மட்டும் பறக்கக்கூடிய ஆளில்லா விமானம் மூலம் வேகமான காற்றிற்கு மத்தியில், அதி உயரத்தில் விமானங்களை இலக்குவைக்க முடியாது எனவும் சில நிபுணர்கள் கருத்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Flight-e1463482522657

Related posts:

அதிபர்,ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள்:அதிர்ப்தியில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு - சுகாதார சேவ...
டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங...