இந்திய – கனேடிய உறவு சீர்குலைவு – கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டு!

Friday, October 18th, 2024

இந்திய – கனேடிய உறவு சீர்குலைத்ததற்குக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.  அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது உறுதியாகி இருக்கிறது.

இந்தியா மற்றும் இந்தியத் தூதர்களுக்கு எதிராகக் கூறிய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு , கனடா எங்களிடம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

இந்தியா – கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட விரிசலிற்கு கனேடியப் பிரதமர் மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: