ஆட்சி மாற்றங்கள் ஈ.பி.டி.பி. கட்சியை ஆட்டம் காணச் செய்யாது – செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Saturday, October 5th, 2024
~~
தென்னிலங்கையுடன் ஈ.பி.டி.பி. கட்சி வளர்த்து வைத்துள்ள தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் வழங்குகின்ற ஆதரவினால் கிடைக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி மத்தியில் முன்னெடுக்கப்படும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் ஆட்சி மாற்றங்களினால் ஆட்டம் காணாது என்று தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் மக்களது ஆணை ஈபிடிபிக்கு கிடைக்கும் பட்சத்தில் எமது செயற்பாடுகள் இணக்க அரசியல் வளிமுறைகள் திருப்திகரமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மானிப்பாய் தொகுதி வட்டார உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய வேளையே அவர் மேற்படி கருத்துனை தெரிவித்தார்.
மேற்படி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்சியின் வேலைத்திட்டங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடினார்.ன
Related posts:
|
|
|


