யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!

Saturday, November 10th, 2018

யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த குறித்த பிரதிநிதிகள் தமது கூட்டுறவு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

குறிப்பாக பனம் தொழில்துறை சார்ந்தவர்கள் தற்போது பல்வேறுபட்ட நெருக்கடிகளுடனும் இடர்பாடுகளுடனும் வாழ்ந்து வருவதாகவும் இதுவிடயம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது அவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

குறிப்பாக திக்கம் வடிசாலை மீள் புனரமைப்பு, பனம் கைப்பணித் தொழில்துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

viber image00

viber image

Related posts:


விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரதம...
வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்; எம்.பி வலி...
நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் மீள் செலுத்தும் காலத்தை இயல்புநிலை வரும்வரை ஒத்திவைக்க வேண்டும் - அமை...