அமரர் மகேந்திரராஜாவின் பூதவுடலுகு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 22nd, 2026


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் தோழர் விந்தன் அவர்களின் உறவினர் அமரர் நற்குணம் மகேந்திரராஜாவின் பூதவுடலுகு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களான ராகுலன் மற்றும் அச்சுதன் ஆகியோரது தந்தையாரான அமரர்
நற்குணம் மகேந்திரராஜா,
வயது மூப்பின் காரணமாக கடந்த 21 ஆம் திகதி தனது 70 வயதில் காலமானார்.

அன்னாரின் பூதவுடல்
யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படிருந்த நிலையில், அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு  அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து அமரருக்கு தமது இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: