அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
சுகயீனம் காரணமாக அமரத்துவமான அன்னாரது பூதவுடல் ஊர்காவற்றுறையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம், அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
இதன்போது, முன்னாள் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் தோழர் கமல், கட்சியின் யாழ் தலைமை அலுவலக நிர்வாக செயலர் தோழர் வசந்தன் மற்றும் வேலனை பிரதேச சபை முன்னாள் தலைவர் சிவராசா போல் ஆகியோரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை தெரிவித்தனர்.
அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் ஊர்காவற்றுறையின் முன்னாள் பிரதேச சபை தலைவரும் பிரதேசத்தின் நிர்வாக பொறுப்பாளர் தோழர் ஜெயகாந்தன் அவர்களின் மாமனாரும் திருமதி ஜெயகாந்தன் ரம்பாவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|