அனுர அரசிலும் அதிகரித்துச் செல்லும் அமைச்சுக்கள்!

Friday, October 10th, 2025


……
மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர். 

அமைச்சர் பிமல் நிரோஷன் ரத்நாயக்கவிடமிருந்து 
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு பறிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள  முடிவு செய்துள்ளது இதற்கு அரசாங்கம் காரணம் சொல்லியுள்ளது

அதன்படி
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் நிரோஷன் ரத்நாயக்க 
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அனுர கருணாதிலக 
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக எச்.எம். சுசில் ரணசிங்க 
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக அனில் ஜெயந்த பெர்னாண்டோ 
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சராக  டி.பி. சரத் 
மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சராக எம்.எம். முகமது முனீர் 
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக எரங்க குணசேகர 
சுகாதார பிரதி அமைச்சராக முதித ஹன்சக விஜயமுனி 
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக அரவிந்த செனரத் விதாரண 
இளைஞர் விவகார பிரதி அமைச்சராக எச்.எம். தினிது சமன் குமார 
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக யு.டி. நிஷாந்த ஜெயவீர 
வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா அரியரத்ன 
எரிசக்தி பிரதி அமைச்சராக ஈ.எம். ஐ. எம். அர்காம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதே நேரம் தமது அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்ததாக இருக்கும் என்று இன்றைய அரசு கூறிவரும் நிலையில் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 
00

Related posts: