தொண்டராசிரியர்களுக்கான கலந்துரையாடல் நாளை!

Sunday, October 8th, 2017

வடமாகாண தொண்டராசிரியர்கள் அனைவரும் 09.10.2017 அன்று 9 மணிக்கு ஆரியகுளம் புதிய கலைக்கல்லூரி மண்டபத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என யாழ். மாவட்ட தொண்டராசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

வட மாகாணத்தில் ஏறத்தாள 1100 தொண்டராசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் வெறும் 182 பேரின் பெயர் விபரங்கள் நியமனத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகத்தின் பதிவின் படி தெரிவு செய்யப்பட்டதாகவும் ஏனையவர்களை இவ்வாறு பதிவு செய்யாததால் புறக்கணிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையில் தாம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கற்பித்து வருவதாகவும் தமக்கு நியமனம் கிடைக்காது விடுவது நியாயமானதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதைக் கடந்தவர்களாகவும் இனிமேல் எந்தவொரு அரச வேலைக்கும் செல்ல முடியாத நிலையிலும் காணப்படுகின்றனர்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் மேற்கொண்டு நியமனத்திற்கான பல நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளதால் பாதிக்கப்பட்ட வடமாகாண தொண்டராசிரியர்கள் அனைவரும் 09.10.2017 அன்று 9 மணிக்கு ஆரியகுளம் புதிய கலைக்கல்லூரி மண்டபத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என யாழ். மாவட்ட தொண்டராசிரியர் சங்கம் அறிவித்துள்ளது

Related posts: