அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இனந்தெரியாதோர் கைவரிசை!…….

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நேற்றிரவு குறித்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டின் வெளிக்கதவை மூடிவீட்டு வீட்டிற்குள் இருந்த வேளை இரவு 10.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராது அயலவவர்களை அழைத்த போது குறித்த தாக்குதல் நடாத்தியவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் மீள் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்!
கிழக்குத் திமோர் அரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சவை அங்கீகாரம்!
வடகீழ்ப் பருவக்காற்றுஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கும் - பிரதீபராஜா எதிர்வுகூறல்.!
|
|