ரஷ்யா சீனாவின் வீட்ரோவால் வீழ்த்தப்பட்டது அமெரிக்காவின் ஐ.நா தீர்மானம்!

Tuesday, April 7th, 2026


…..
ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்று தோற்கடித்தன.

பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் அப்துல் லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியமான கூட்டத்தில், 15 உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனினும், நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் எதிராக வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.

பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தத் தீர்மானம் பலமுறை மாற்றியமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் ‘அத்தியாயம் VII’ (Chapter VII) இன் கீழ் கொண்டுவரப்படவிருந்தது.

பின்னர் அது நீக்கப்பட்டு, “அனைத்து தற்காப்பு வழிமுறைகளையும் பயன்படுத்த அனுமதி” என மாற்றப்பட்டது.

இறுதியாக, “தற்காப்பு முயற்சிகளை வலுவாக ஊக்குவித்தல்” என்ற அளவில் மென்மையாக்கப்பட்ட போதிலும் ரஷ்யா மற்றும் சீனா அதனை ஏற்க மறுத்துவிட்டன.

வாக்கெடுப்பிற்கு முன்னதாக உரையாற்றிய பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் “இந்தத் தீர்மானம் புதிய யதார்த்தத்தை உருவாக்கவில்லை. மாறாக, ஈரானின் தொடர்ச்சியான விரோதப் போக்கிற்கு எதிரான ஒரு தீவிரமான பதிலடி இதுவாகும்.

உலகிற்கு மிக முக்கியமான இந்த நீர்வழியை ஈரான் தனது நலனுக்காக ஆயுதமாகப் பயன்படுத்துவதை பாதுகாப்புச் சபை தடுக்கத் தவறினால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஏனைய நீர்வழிகளிலும் தொடரக்கூடும், இறுதியில் உலகம் ஒரு காடாக மாறிவிடும்.” என்றார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்த இந்தத் தீர்மானம் தோல்வியடைந்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
099

Related posts: