ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்!   

Saturday, April 4th, 2026

ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (மு-15) ரக போர் வானூர்தியின் குழு உறுப்பினர்களில் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவம் முன்னெடுத்த அதிரடி மீட்பு நடவடிக்கையின் மூலம் குறித்த விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்த ரக வானூர்திகள் இருவர் பயணிக்கும் வசதி கொண்டவை என்பதால் மற்றொரு விமானியைத் தேடும் பணிகள் தற்போது ஈரானிய எல்லைக்குள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த ஹெலிகாப்டரால் தேடுதல் நடவடிக்கையை அணுக முடியாவிட்டால்ய ‘யுரு -130’ ரக விமானத்தைப் பயன்படுத்தி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கவும் அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஈரான் அரசு தப்பியோடிய விமானிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பெரும் தொகை வெகுமதி அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவின் பிளாக் ஹாக்ரக உலங்குவானூர்திகள் மற்றும் மீட்புப் படையினர் ஈரானிய வான்பரப்புக்கு மிக அருகில் தாழ்வாகப் பறந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே எந்த நேரமும் நேரடி மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி ஒருவர் ஈரானில் குதித்து விட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த விமானியை உயிருடன் பிடித்து பொலிஸில் ஒப்படைப்பவருக்கு விலைஉயர்ந்த பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த இஸ்ரேல் இராணுவ அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

000

Related posts:

மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி குற்றங்களை கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஏற்றுகொண்டார...
இலங்கையின் வருவாயை 10 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் வெளியிடு!
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்த விவகாரம் - சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத...