பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து நாளையதினம் விசேட கூட்டம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து நாளையதினம் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதுர்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து நாட்டின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் நாளைய தினம் கூட்டம் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் - மண்டைதீவில் டக்...
சண்டிலிப்பாய் இந்து கிண்ணத்தைத் தனதாக்கியது!
முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!
|
|