பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் – மாதாந்தம் 40 முதல் 50 பொலிசார் சேவையிலிருந்து வெளியேறுகின்றனர் – பொலிஸ் தலைமையகம் தகவல்!
Tuesday, June 13th, 2023பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாதாந்தம் 40-50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் குறைப்பு, சேவைக் காலம் எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படாதது, ஐந்தாண்டு விடுமுறை எடுத்து வெளிநாடு செல்வது, வங்கிக் கடன் பெறுவது போன்ற காரணங்களை முன் வைத்து அதிகமானோர் பொலிஸ் துறையை விட்டு வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சேவையை விட்டு வெளியேறிய பெரும்பாலான அதிகாரிகள் ஐந்து வருடங்களுக்கும் குறைவான சேவையை கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொன்சேகாவை எச்சரிக்கும் அரச தலைவர்கள்!
எரிமலை வெடித்து 82 வீடுகள் இறுகிப்போயின!
வாகனங்களின் விலையில் மாற்றம் - வாகன இறக்குமதியாளர் சங்கம்!
|
|