நியூசிலாந்தில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான யு.ஜி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியான ஜிஸ்போர்ன் என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! - டக்ளஸ் தேவானந...
தனியார் காணிகள் விடுவிக்கப்படும் - அரசாங்க அதிபர்!
நாடாளுமன்ற தேர்தல் 2020
|
|