நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது!

Tuesday, June 21st, 2016

நுளம்புச் சுருளொன்றின் மூலம் வெளிவரும் புகையின் அளவானது  75-137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானதென அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் வீதி வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் வெளிப்புற காற்று மாசடைவை விட வீடுகள் மற்றும் வாகனங்களின் உட்புறத்தில் அதிக காற்று மாசடைவதாக (indoor air pollution) புதிய ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விறகடுப்பு, நுளம்புச் சுருள், வாசணை திரவியங்கள், சாம்பராணி, கற்பூரம் முதலியவை வீட்டில் உபயோகிப்பதனாலேயே காற்று அதிகமாக மாசடைவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த புகையின் காரணமாக ஒரு வருடத்தில் 43 இலட்ச உலக மக்கள் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இதில் சிறு குழந்தைகளும் பெண்களுமே அதிகம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

Related posts: