நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை !

நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இதுதொடர்பில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சபைக்கு இன்று (11) அறிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஒரு தற்காலிக நடவடிக்கையாக பொதுமக்கள் இனி பாராளுமன்றத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன அறிவித்தார்.
அதன்படி நாடாளுமன்ற கலரிகள் தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!
வடக்கில் 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!
இங்கிலாந்து அணிக்கு வெற்றி!
|
|