ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!

Friday, September 1st, 2017

உள்நாட்டு மருந்து உற்பத்தித் துறையில் புதிய மைற்கல்லாக நவெஸ்டா பாமசீயுடிகல் நோயெதிர்ப்பு ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்துவைத்துள்ளார்.

ஹொரணயில் திறக்கப்பட்ட இந்த நவெஸ்டா பாமசீயுடிகல் கம்பனியினால் 1.4 பில்லியன் முதலீட்டில் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய மருந்து உற்பத்திச்சாலை வருடாந்தம் 50 மில்லியன் மருந்து குப்பிகளை அரச சுகாதார துறைக்கு வழங்கவுள்ளது. இதன் மூலம் இறக்குமதிக்காக செலவாகும் பெருமளவு பணத்தை மீதப்படுத்த முடியும். உயிரியல் இரசாயன, மருந்தியல், நுண்ணங்கி உயிரியல் விஞ்ஞானம் போன்ற மருந்து உற்பத்தியுடன் தொடர்பான நிபுணத்துவ அறிவுடைய இலங்கையர்களுக்கு இங்கு தொழில் வாய்ப்பும் கிடைக்கும்.

புதிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது தொகுதி மருந்துப்பொதி நவெஸ்டா பாமசீயுடிகல் கம்பனியின் தலைவர் சஞ்ஜய ஜயரத்னவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

Related posts: