கிளிநொச்சியில் விவசாயம் அபிவிருத்தி –  மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் !

Monday, March 20th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் விவசாயம் அபிவிருத்தி அடைந்துள்ளது என்று கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி அணையாளர் ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

போருக்கு முன்னரான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 49,428 ஏக்கர் வயல் நிலங்களில் விதைப்பு நடைபெற்றது. தற்போது 64,835 ஏக்கர் நிலம் விவசாய நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்றது. 2009 ஆம் அண்டுக்கு முன்னர் கமக்கார அமைப்பின் கீழ் 396 பெரிய குளங்கள் காணப்பட்டன.

தற்போது அவை 463 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.2009 ஆம் அண்டுக்கு முன்னர் 127 சிறிய குளங்கள் காணப்பட்டன.  தற்போது அவை 169 ஆக அதிகரித்துள்ளன. மாவட்டத்தில் போருக்கு முன்னர் 118 கமக்கார அமைப்புக்கள் காணப்பட்டன. தற்போது ஆவை 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன்னர் பெண் கமக்கார அமைப்புக்கள் காணப்படவில்லை.

தற்போது 120 பெண் கமக்கார அமைப்புக்கள் காணப்படுகின்றன. கமக்கார அமைப்புக்கு போருக்கு முன்னர் 8 உழவியந்திரங்கள் இருந்தன. தற்போது 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. 6 கமநல அபிவிருத்தி நிலையம் காணப்பட்ட நிலையில் தற்போது 8 ஆக அதிகரித்துள்ளன. முன்னர் உரக் களஞ்சியங்கள் 3 காணப்பட்ட நிலையில் தற்போது 9 உள்ளன. அறுவடையில் காலத்துக்கு காலம் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. போருக்கு முன்னரான காலப்பகுதியை விட தற்காலத்தில் அடிப்படை வசதிகள் அதிகரித்த தன்மை காணப்படுவதால் விளைச்சலின் அளவும் அதிகரித்தே காணப்பட வேண்டும் என்றார்.

Related posts:


இருதரப்பு உறவுகளையும் மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன் – பிரதமர் மஹிந்தவின் கோரிக்கைக்கு இந்தியப் ...
புலிகள் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!
இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணம் விஜயம் - கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதுடன் ப...