சீனாவில் அடை மழை –விமானப் போக்குவரத்துகள் பாதிப்பு

Sunday, August 13th, 2017

சீனாவில் அடை மழையுடன் கூடிய கடும் காற்று வீசுவதால், அங்கு விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்று மற்றும் இடியுடன்; கூடிய அடை மழை தொடர்ந்து சில நாட்களுக்கு பெய்யும். இந்நிலையில், மலைப்பாங்கான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அடை மழை காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பரபரப்பாகக் காணப்படும் பீஜிங்கிலுள்ள விமான நிலையத்தில் சுமார் 500 விமானப் போக்குவரத்துச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், 182 விமானங்கள் தாமதமாக தரையிறங்கியுள்ளன.

இந்நிலையில், விமானப் போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தை தொடருமாறு விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts: