ஓகஸ்ட் 1 முதல் முன்பள்ளிகள் ஆரம்பம்!
Wednesday, July 22nd, 2020
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முன்பள்ளிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் தற்போது குணமடைந்துள்ளனர். அதே போன்று கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளானவர்களிடமிருந்து சமூகத்திற்கு தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் அனைத்து பாலர் பாடசாலைகளையும் திறப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக து சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை -ரஷ்யா தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!
சிரேஷ்ட கலைஞர்களுக்கான மருத்துவ காப்புறுதித் திட்டம்!
நாடெங்கும் மருத்துவ நிர்வாக சேவையில் புதிய நியமனங்கள்!
|
|
|


