இலங்கை -ரஷ்யா தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!

Wednesday, January 10th, 2018

இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து கொண்டு செல்ப்பட்ட கொள்கலம் ஒன்றில் வண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து இடைநிறுத்தம் ஒன்று கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை அகற்றிக் கொள்வதற்காக கலந்துரையாடலொன்றுக்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபையின் பிரதிநிதிகள் 09 பேர் அடங்கிய குழுவொன்று ர~;யாவிற்கு சென்றிருந்ததுடன் அந்தக் கலந்துரையாடல்களின் பின் தேயிலை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டது.

இதேவேளை இறக்குமதி தடை நீக்கப்பட்டதன் பின்னர் முதலாவது தேயிலை தொகுதி அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த வண்டு இதுவரை இலங்கையில் இனங்காணப்படவில்லை என விவசாய பணிப்பாளர் நாயகம் ரொஹான் விஜேகோன் தெரிவித்துள்ளார்.

எனினும் தேயிலை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளின் களஞ்சியசாலைகளுக்கு புகை விசிறும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts: