ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது – தேசிய சங்க சம்மேளனம்!

அரசாங்க சேவையாளர்களின் உத்தியோகபூர்வ ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது என்று, தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல ஷாசனரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே நீதி என்ற கொள்கை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்.
அதன்படி அனைத்து அரச நிறுவனங்களிலும் அனைவருக்கும் பொதுவான ஆடை முறைமை அமுலாக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் தனிப்பட்ட ஒரு இனத்துக்கு மாத்திரம் சிறப்புரிமை வழங்கப்படுவதால், இன்னொரு இனம் பாதிக்கப்படுகிறது.
நாளை இன்னொரு இனம் அரைக்காற்சட்டை அணிந்து அரச நிறுவனங்களுக்கு பிரவேசித்தால், நாட்டின் கலாசாரம், கட்டமைப்பு என்னாகும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான காணி குத்தகை வரி அடுத்த ஆண்டு முதல் ...
60 வீதம் தொகுதிவாரி 40 வீதம் விகிதாசாரம்: இதுவே புதிய தேர்தல் முறை!
கார் குண்டுவெடிப்பில் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பலி - ஆப்கானிஸ்தானில் சம்பவம்!
|
|