வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான காணி குத்தகை வரி அடுத்த ஆண்டு முதல் வாபஸ்!

Sunday, September 11th, 2016

இலங்கை காணிகளை வெளிநாட்டவர்கள் குத்தகைக்கு பெறும்போது விதிக்கப்படும் 300 வீத வரியை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகளுக்காக காணி கட்டளைச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, காணிகள் அமைச்சின் செயலாளர் ஐ.ஏச்.கே. மகாநாம ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டவர்களுக்கான காணி குத்தகை வரி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வாபஸ் பெறப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய வெளிநாட்டவருக்கான காணி குத்தகை வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இறுதியாக வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வெளிநாட்டவர்களுக்கான காணிக் குத்தகை வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட முதலீடுகளின் உரிமம் தொடர்பான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக காணிகள் அமைச்சின் செயலாளர் ஐ.ஏச்.கே. மகாநாம மேலும் சுட்டிக்காட்டினார்.

Emblem_of_Sri_Lanka

Related posts: