சமூக ஊடங்கள் மீதான தடைக்கு 71.4 வீத மக்கள் ஆதரவு !

Tuesday, March 13th, 2018

கண்டியில் இடம் பெற்ற குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போஸ்புக் வைபர் மற்றும் வட்சப் ஆகிய சமூக ஊடகங்களை தற்காலிகமாக இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தமை சரியானதா இல்லையா என்று மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 71.4 வீதமானோர் அந்த முடிவு சரியானதென பதிலளித்துள்ளனர் .

இதே வேளை இவ்வாறு சமூக சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படாதா என்ற கேள்விக்கும் 49 வீதமானோர் ஆம் என்ற பதிலளித்துள்ளனர் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற குழப்பங்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் தவறான செய்திகளும் வெறுப்பூட்டும் செய்திகளும் பரவுவதனை தடுக்கும் நோக்கடன் அரசாங்கம் சமூக ஊடகங்களான பேஸ்புக் வட்சப் வைபர் ஆகியவற்றைத் தடை செய்திருந்தது இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆங்கிலப் பத்திரிகை யொன்றினால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் அரசாங்கம் மேற் கொண்ட முடிவு சரியானதென பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.

இதே வேளை இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்த 28.6 வீதமானோர் அரசின் முடிவு தவறானதென்று கூறியிருந்த அதே நேரம் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படாதா என்ற கேள்விக்கு 49 வீதமானோர் ஆம் என்றும் 38.8வீதமானோர் இல்லையென்றும் 12.2 வீதமானோர் தீர்மானிக்க முடியாத நிலையில்  இருப்பதாகவும் கூறியுள்ளனர் .

வர்த்தக நிபுணர்கள் புலமையாளர்கள் மாணவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளடங்கிய 200 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது .அத்துடன் இந்த ஆய்வில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களும் அரசின் முடிவு சரியான தென்று தெரிவித்துள்ளார் ஆனால் சிரே~;ட அல்லது அதிக வயதுடைய அதிகாரிகள் அரசின் முடிவைத் தவறானதென குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த சிலர் சமூக ஊடகங்களை தடை செய்வதைக் காட்டிலும் அவற்றில் வெறுப்பூட்டும் கருத்துக்களை பகிர்வோரிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

Related posts:


நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன்இ முழுப் பொறுப்பை ஏற்கிறேன் - டோனி பிளேர்!
கட்சிகளுக்கிடயே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம் - ஈ.பி....
வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் ட...