அதிகாரிகளே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கான காரணம்  – அம்பலமானது உண்மை!

Wednesday, November 15th, 2017

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளே கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

குறித்த நெருக்கடி தொடர்பில் ஆய்வு செய்வதற்காக 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த குழு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதனூடாக எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் பெற்றோல் களஞ்சியத்தில் சேமித்திருக்க வேண்டிய அளவு பெற்றோலை சேமிக்க தவறியமை தெரியவந்துள்ளது இலங்கையில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை சேமித்து வைக்கக்கூடிய வசதி இருக்கிறது . எனினும் நாளாந்தம் 2000 மெட்ரிக் டன் எரிபொருளே தேவைப்படுகிறது.

ஆனால் உரிய அளவான எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதனை அதிகாரிகள் பலர் அறிந்திருந்தும், அதனை முகாமைத்துவத்துக்கு தெரியப்படுத்தவில்லை என்று, குறித்த அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

Related posts: