சிறிய அளவிலான கடன் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை – அரசாங்கம்!

Thursday, November 2nd, 2017

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கான கடன் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல்திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்த்துறைக்கான கடன் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.

இக்கடன் திட்டத்திற்கான கேள்விகள் அதிகரித்து வருகின்றமையினால் குறித்த வேலைத்திட்டத்தின் கால எல்லை நிறைவடைவதற்கு முன்னர், முழு நிதியினையும் பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலாளர்களுக்கான சலுகை கடன் தொகையினை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கடன் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி பெரும்பாலானோர் பயனடைய கூடிய வகையில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக பெற்று கொள்வதற்காக ஆசிய அபிருத்தி வங்கியுடன் இணங்கப்படான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்

Related posts: