83 கலவரம் நடக்காமல் இருந்திருந்தால் தமிழில் பேசி இருப்பேன் –  மஹிந்த!

Wednesday, July 5th, 2017

1983ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத்துக்கு ஜூலைக் கலவரம் காரணமாக வரமுடியாமல் போனது. அந்தக் கலவரம் நடக்காமல் இருந்திருந்தால் நான் இப்போது தமிழில் பேசியிருப்பேன்’ என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்துரைக்கையில் கூறியதாவது

ஆண், பெண், மத, மொழி, இன, பணக்காரர், வறியவர் என்று வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதே வாக்களிக்கும் உரிமையாகும். 18 வயதான ஒவ்வொருவரும் தமது உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டாயமாக கிடைக்கின்ற ‘மரணத்தை பெற்றுக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. ஆனால் வாக்கை விரும்ப வேண்டும். வாக்கின் மூலம் சரியான தலைவர்களை உருவாக்கினால் நாம் வள்ளம் மூலம் ஆஸ்திரேலியா செல்லத் தேவையில்லை.

நல்ல அபிவிருத்தி , சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்குக் கூட வாக்கு முக்கியம் பெறுகின்றது. தெர்தல் நடைபெறவில்லை என்று மக்கள் தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் விமர்சிக்கின்றனர். தேர்தலை நடத்துகின்ற அதிகாரம் மாத்திரமே எம்மிடம் இருக்கின்றது. அதற்கான அனுமதி அதிகாரங்களை நாடாளுமன்றம்தான் தர வேண்டும். ‘உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் உள்ளுராட்சி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுகின்ற போதுதான் தேர்தலை நடத்த முடியும். நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானமும் இதில் முக்கியமானது,

தேர்தலில் தமது வாக்கு மூலம் அரசியல்வாதி ஒருவரைத் தெரிவு செய்வதுடன் எமது கடமை முடிந்தது என்று மக்கள் நினைத்துவிட முடியாது. தேர்தல்கள் நடத்தப்பட்டவில்லையானால் மக்கள் கேள்வி கேட்ட வேண்டும். மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றார்.

Related posts:

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச - தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மர...
அரிசி ,சீனிக்கு இன்றுமுதல் உயர்ந்தபட்ச சில்லறை விலை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்...
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் - க...