பொருளாதார நெருக்கடி – நாட்டில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளின் பெறுமதி 200 பில்லினை தாண்டியது – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Monday, December 12th, 2022

கணக்கெடுப்பொன்றின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

உரிமம் பெற்ற 13 வணிக வங்கிகள் மற்றும் 10 அடகு நிலையங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கத்தை அடகு வைத்தவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் அடகு நிலையங்களில் அதிக பணம் கிடைக்கப்பெறுவதால், அந்த சேவையை பெறுவதற்கு தற்போது நுகர்வோர் அடகு நிலையங்களை அதிகளவில் நாடுவதாகவும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தவறான தகவல்களைப் பரப்பி மக்களை குழப்பி வரும் சிலர் - தமது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்காக மக்களை தூண்ட...
சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில்...
22 இலங்கை மாணவர்கள், இந்தியாவில் இந்தி படிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் புலமைப்பரிசில் வாய்ப்பு!