பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை – ஈரான்!

Thursday, September 5th, 2019


அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா பிரான்ஸ் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது.இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது. அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்துவோம் என ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

இந்தநிலையில், அந்த நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது ஐரோப்பிய நாடுகளுடன் நடைபெற்றுவரும் பேச்சு வார்த்தை பலனளிக்காமல் போனால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் தனது உறுதிப்பாட்டை சில நாட்களுக்குள் குறைத்துக் கொள்ளும் எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Related posts: