புதிய ஏவுகணை முயற்சியில் வடகொரியா தோல்வி- தென்கொரியா!

Monday, April 17th, 2017

சர்வதேச நாடுகளை அச்சுறுத்திவரும் வடகொரியா மேற்கொண்ட புதிய ஏவுகணை பரிசோதனை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளதுடன் இதனை அமெரிக்க இராணுவமும் உறுதிசெய்துள்ளது.

வடகொரியா சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கடந்த காலங்களில் பல அணுவாயுத பரிசோதனைகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் வடகொரியாவின் தென் மாநிலமான ஹம்கோயிங்கில் உள்ள சின்போ பகுதியிலிருந்து புதிய பாலிஸிடிக் ஏவுகனையை ஏவியது.

எனினும் குறித்த ஏவுகனையானது விண்ணில் ஏவப்பட்ட சில விநாடிகளில் வெிண்ணில் வெடித்து சிதறியது.

குறித்த வெடிப்புக்கு ஏவுகனையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை பயன்படுத்தப்பட்ட ஏவுகணை என்ன வகை என்பதை தென் கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், 1000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடிய 4க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை, ஐப்பான் கடல்பகுதியில் வீசி வடகொரியா சோதனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் இதனால் ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்ப பகுதிகளில் பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: