இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரிப்பு – இழுத்து மூடப்படுகின்றது பாதுகாப்பு தரப்பினர் பல முகாம்கள்!

Sunday, April 26th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை, சூரியவேவ பகுதிகளில் வசிக்கும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலயங்களில் 22 கடற்படையினர், கடற்படையினரின் உறவினர் நால்வர் மற்றும் 16 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவேளை திருகோணமலைபதவிசிறிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானொருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பதவி சிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இணங்காணப்பட்டவர் பதவிசிறிபுர – 10 கொலனியைச் சேர்ந்த 28 வயதுடைய கடற்படை சிப்பாய் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீர்கொழும்பு சீதுவை இராணுவ விசேட படையின் இராணுவ முகாம் பூட்டப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய 150 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு தேசிய, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என  சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் காய்ச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்இந்நிலையிலேயே குறித்த நபர் நேற்று உயிரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 120 பேர் பூரணகுணம் அடைந்துள்ளது வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 340 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சிஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிப்பாய் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதானவர் எனவும் இம்மாதம் தொடக்கத்தில் விடுமுறையில் வீடு சென்று கடந்த 14 தினங்களிற்கு முன்பே மீண்டும் அவர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு பணிக்குத் திரும்பிய சிப்பாய் முகாமில் தனிமைப் படுத்தலில் இருந்த வந்த நிலையில் நேற்றுக்காலை குறித்த இராணுவச் சிப்பாய்  திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

இதையடுத்து குறித்த இராணுவச் சிப்பாயின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர் கொரோனா காரணமாக உயிரிழந்திருக்கலாம் உஎன்ற சந்தேகத்தில் அவரது இரத்த  மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த இராணுவ சிப்பாய்கு கொரோனா தொற்றில்லை என இன்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இராணுவ சிப்பாய்க்கு சிறுநீரகங்கள் செயலழிந்திருப்பதாக கூறப்படுகின்றது.இதேவேளை, உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது வரையில் 29 இலட்சத்து 20 ஆயிரத்து 905 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 3 ஆயிரத்டது 269 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை என பொலிஸ் குற்றச்சாட்டு!
அஸ்ட்ராசெனெகாவை பெற்றவர்களுக்கு இரண்டாவது செலுத்துகையாக பைஸர் தடுப்பூசியை செலுத்த முடியும் - உலக சுக...
குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிவரும் - காற்ற...