நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசேட கூட்டம் இன்று!

Tuesday, July 5th, 2016

பொதுமுயற்சியான்மை குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்) வின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கையை ஆராயும் நோக்கில் இன்றைய தினம் கோப் குழு கூட உள்ளதாக அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சபாநாயகரிடம் வழங்கியுள்ள முழு இரகசிய அறிக்கையையும் கோப் குழுவிடம் வழங்குமாறு ஹந்துநெத்தி கோரியுள்ளார்.

1251 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் சாரம்ச அறிக்கையே கோப் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுனரே நிதிச் சபையின் பிரதானி என்பதனால் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி எதிர்வரும் 7ம் திகதி கோப்குழுவில் முன்னிலையாக நேரிடும் என சுனில் ஹந்துநெத்தி கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts: