வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்ல ஆங்கில அறிவு அவசியம் – அமைச்சர் தலதா அதுகோரல!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயப்படுத்தப்படவுள்ளது. நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அதுகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் வெளிநாடுகளில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. mஅதேநேரம், வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள் அங்கிருந்தே இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வழிமுறை குறித்தும் ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர் வரையில் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரர் ஆறுமுகனின் தொண்டமானின் பூதவுடல் பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!
விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குங்கள் - பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமை...
|
|