வெற்றிபெற்ற அரச அலுவலர்களுக்கு மாதத்தில் 5 நாள் சம்பளத்துடன் விடுமுறை!

Friday, February 23rd, 2018

உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தத்தமது திணைக்களங்கள் ஊடாக சம்பளமற்ற லீவினைப் பெற்று வெற்றிபெற்ற அரச அலுவலர்களுக்கு உள்@ராட்சி சபை கடமையின் நிமித்தம் மாதத்தில் ஐந்து நாட்கள் சம்பளத்துடனான லீவினை பெற்றுக் கொள்ள முடியும்.

இது தொடர்பாக தாபனக் கோவையில் ஓஓ – ஓ – 11 ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உபபந்தி திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.

அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள ஒரு அலுவலர் உள்@ராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து அச்சபையின் உப தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ தெரிவு செய்யப்பட்டிருப்பின், சம்பளத்துடனான லீவுக்கு அருகதையுடையவர்.

இவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் தமது நிரந்தரப் பதவியில் இருந்து கொண்டே உள்@ராட்சி நிறுவனக் கூட்டங்களுக்கு கலந்துகொள்வதற்கும் அக் கூட்டத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் சேவையின் அவசர நிலைமையை கருத்தில் கொண்டு மாதமொன்றுக்கு 5 நாட்கள் சம்பளத்துடனான லீவை திணைக்களத் தலைவர்கள் வழங்க வேண்டும்.

எனினும், உள்@ராட்சி சபைத் தலைவராக தெரிவு செய்யப்படும் அரசியல் உரிமையுடைய அரச உத்தியோகத்தர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. இவ்வாறானவர்கள் 7 நாட்கள் மாதத்தில் சம்பளத்துடனான லீவை பெறலாம். அல்லது தலைவராக பதவி வகிக்கும் காலத்திற்காக சம்பளமற்ற லீவை பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: