யாழ்ப்பாணப் பல்கலையில் சுற்றுலாக் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு முயற்சி!

Tuesday, April 3rd, 2018

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

சுற்றுலாத் துறையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு பல்வேறு வேலை வாய்ப்புக்களையும் இளைஞர்களுக்கு வழங்க முடியும். இதற்கான கற்றல் நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வந்தாலும் அதற்கான அங்கீகாரத்துடன் கூடிய கற்கை நெறி ஒன்று அவசியம். இலங்கையில் உள்ள ஹோட்டல் கற்கை நெறியகம் தனது கிளையை வடக்கு மாகாணத்தில் நிறுவவில்லை. ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான அனுமதி மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts:


துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...
மார்ச் 11 ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் - 500 பேருக்கு மட்டுமே அனுமதி...
இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு நெகிழ்வுடனான நாணயமாற்று அவசிய...