விலைக் காட்சிப்படுத்தலின் கீழ் தேங்காயின் விலையும் சேர்க்கப்படவேண்டும்!

Tuesday, October 10th, 2017

அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தேங்காயின் சில்லறை விலை தற்போது குறைந்திருப்பதாக தெங்கு செய்கைச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி 65 ரூபா என்ற மட்டத்திற்கு தேங்காயின் விலை குறைந்துள்ளது. எனினும், கூடிய விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வியாபாரிகளும் உள்ளதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.

கடைகளில் தேங்காயின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைக் காட்சிப்படுத்தலின் கீழ் தேங்காயின் விலையும் சேர்க்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யாத வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் நடமாடும் சேவை மூலம் 65 ரூபா என்ற விலை மட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. சதொச விற்பனை நிலையங்கள் மூலம் இந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர வியாபாரிகள் மூலம் 65 ரூபாவுக்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெங்குச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts: