லைசன்ஸ் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறைக்கு!
Sunday, February 10th, 2019
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார்.
யாழ் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரமும் இருந்திருக்கவில்லை.
சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை யாழ் நீதிவான் நீதிமன்றில் நேற்று பொலிஸார் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான் அந்தோனிசாமி பீற்றர் போல் எதிரியை வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இருவரை தலா 50 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


