யுத்தத்தால் பாதிகப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு – சுகாதார அமைச்சர்!

Thursday, June 14th, 2018

நாடுமுழுவதும் யுத்தத்தால் உயிரிழந்தோர் காணாமல் ஆக்கப்டோர் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்பட்டசேதங்களுக்கும் நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தோர் காணாமற்போனோர் சொத்துக்களை இழந்தோர் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டோர் ஆகியோருக்கு நட்டஈடு வழங்குமாறு அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கையில் குறிப்பிட்டதன் அடிப்படையில் பயங்கரவாதத்துடள் தொடர்பு பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கினால் அது பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அதன் அர்த்தம் அமைந்துவிடும் என ஜனாதிபதிமைத் திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். ஆகவே பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சொற்பதத்தை நீக்கிவிட்டுபாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவி மக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென்று அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களைத் தவிர்த்துவடக்கு கிழக்கில் மட்டுமன்றிபுலிப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்தமக்களுக்கும் நட்டஈடு கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அமைச்சர் ராஜிதசேனாரத்ன.

மேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டசுமார் 12000 பேருக்குகடந்த அரசாங்கம் புனர்வாழ்வளித்து வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தன் அடிப்படையில் இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாகவும் ஆராயப்படும் என்றார்.

அதேவேளை இந்நட்டஈடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் பேருவளை மற்றும் அளுத்கமபிரதேசங்களில் இடம் பெற்றகலவரத்தின் போதுபாதிப்புக் குள்ளானவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்படு மென்றும் எனத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க திருகோணமலையில் நேற்றுக்காலை (13-06-2018) நடைபெற்றகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு நட்டஈடு வேண்டாம் எமதுபிள்ளைகளே எமக்கு வேண்டும் எனகோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன...
நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது -...
டிஜிட்டல் பிரிவினை - அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் - உலக நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்...