யாழில் தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

Sunday, June 24th, 2018

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் கார்கில்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் கார்கில்ஸ் நிறுவனத்திற்கும் சமுர்த்தி நிறுவனத்திற்குமிடையேயான உத்தேச தொழில் மேம்பாடு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

குறைந்த வருமானம் பெறும் பயிற்றப்பட்ட பயிற்றப்படாத இளம் உழைப்பாளிகளின் பொருட்டு விசேட பயிற்சி ஒன்றினை கார்கில்ஸ் நிறுவனத்தின் கீழ் செயற்படும் சிறப்பு அங்காடி வலையமைப்பு பல்வேறு பிரிவுகளிலும் தொழில் வாய்ப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக எதிர்வரும் ஜீலை 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களினதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களினதும் இளைஞர் யுவதிகள் தங்கள் முழுப்பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை, தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களுடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என மாவட்ட சமுர்த்திப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: