பட்டப்படிப்புக்கு ரூபா 8 லட்சம் வட்டியில்லாக் கடன்!

Wednesday, September 13th, 2017

பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களில் இணைய விரும்பும் ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு வட்டியற்ற 8 லட்சம் ரூபா கடனை வழங்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஜி.கே நெம்மவத்த தெரிவித்துள்ளார்.

நான்கு வருடப் பட்டப்படிப்புக்காக 8 லட்சம் ரூபாவும், மூன்று வருடப் பட்டப்படிப்புக்காக 6 லட்சம் ரூபாவும் கடனாக வழங்கப்படும்.

கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்புகளில் இணைவதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர். அரச பல்கலைக்கழகங்களில் உச்ச பட்சமாக 30 ஆயிரம் பேரை மாத்திரமே சேர்க்க முடியும். எஞ்சியுள்ளவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தமது பட்டப்படிப்புகளைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும். இதனாலேயே அவர்களுக்கு சலுகைக் கடன் வசதியை வழங்கத் தீர்மானித்துள்ளோம். இந்தக் கடனுக்கான வட்டிச்சுமை முழுவதையும் அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்.- என்றார்.

Related posts: