கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வோம் – ஊடகங்கள் மத்தியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Friday, November 6th, 2020

எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் நாட்டின் சில பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 9ஆம் திகதி முழுமையாக நீக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் போது உலகில் தற்பொழுது கொரோனா நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் பின்பற்றப்படும் வழிமுறைகளை நாமும் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கொவிட் நோய்த் தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளும் எண்ணக்கருவினை நாமும் பின்பற்ற வேண்டுமென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: