மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிரடிப்படைப் பாதுகாப்பு!
Thursday, September 7th, 2017
நாட்டில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியிருக்கும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனையில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் வெளிவந்த தகவல்கள் காரணமாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி பறிபோனது.
அத்துடன் பிணைமுறி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதுடன் விசாரணை தொடர்பான பல முக்கிய ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆணைக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து தற்போது விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது - இராஜாங்க அம...
கல்விப் பொதுத் தராதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை க...
களஞ்சியங்களில் காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்கு - இரண்டு மாதங்களுக்குள் அறி...
|
|
|


