மீண்டும் இலங்கையில் அனர்த்த எச்சரிக்கை!

Wednesday, July 12th, 2017

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அகலவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் கடும் மழை பெய்துள்ளதன் காரணமாகவே மண்சரிவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் அகலவத்தை பிரதேசத்தில் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார். இதேவேளை குக்குலே கங்கையின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதனை அண்டிய பிரதேச மக்களையும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் எனவும், தென் மாகாணம் மற்றும் பிபில பிரதேசத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் - இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறி...
சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5,300 க்கும் மேற்பட்ட அழைப்பு - இராஜாங்க அமைச்சு!
பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அவுஸ்திரேலிய...

பொறுப்பு கூற வேண்டியவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – அமை...
எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்...