எதனோல் மிகையாக இருப்பில் உள்ளன – பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023

சீனித் தொழிற்சாலைகளின் துணைத் தயாரிப்பான எதனோல் தற்பொழுது மிகையாக இருப்பில் உள்ளதாக பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தலைமையில் குறித்த குழு கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய குறித்த எதனோலை தரநிலையுடன் ஏற்றுமதி செய்ய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் இதன்போது யோசனை ஒன்று முன்மொழியப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதனோல் இறக்குமதியைத் தடை செய்ததன் மூலம் சீனித் தொழிற்சாலைகள் தற்பொழுது இலாபமடைந்து வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

நாட்டில் சீனியின் தேவை சுமார் 06 இலட்சம் மெற்றிக் டன் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் மொத்த தேவையில் 10 சதவீதம் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 2024ஆம் ஆண்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான செயற்திட்டமொன்றை மூன்று மாதங்களில் தயாரித்து சமர்ப்பிக்குமாறும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: